மேற்கு வங்கம்: பா.ஜ.க. வேட்பாளரான வீட்டு வேலை செய்யும் பெண்: ஒரு மாதம் விடுப்பு எடுத்து சூறாவளி பிரசாரம்.!

இவரது கணவர் ஒரு குழாய் பழுது நீக்கும் வேளை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரே மகன் உள்ளான். அச்சிறுவன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். மூன்று பேரும் சிறிய குடிசை வீட்டில்தான் வசித்து வருகின்றனர்.

Update: 2021-03-25 03:11 GMT

மேற்கு வங்கம் மாநிலம், புர்பா பர்த்வான் மாவட்டத்தை சேர்ந்தவர் கலிதா மாஜி 32, இவர் அருகாமையில் உள்ள வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து மாதம் ரூ.2,500 மட்டுமே சம்பாதிக்கிறார்.

இவரது கணவர் ஒரு குழாய் பழுது நீக்கும் வேளை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரே மகன் உள்ளான். அச்சிறுவன் 8ம் வகுப்பு படித்து வருகிறான். மூன்று பேரும் சிறிய குடிசை வீட்டில்தான் வசித்து வருகின்றனர்.

இதனிடையே கலிதா மாஜிக்கு அரசியல் என்றால் அவ்வளவு பிரியம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இவரது அரசியல் நாட்டத்தை அறிந்த பாஜக அவருக்கு நடப்பு சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கியுள்ளது. புர்பா பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஆஸ்கிராம் சட்டமன்ற தொகுதியில் கலிதா மாஜி போட்டியிடுவதற்கு பாஜக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது.




 


இதன் காரணமாக வீட்டு வேலைக்கு ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு, தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் தொகுதி முழுவதும் நல்ல பெயரை எடுத்து வருகிறார். இது தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்துள்ளனர். அப்போது அவர் கூறும்போது, நான் நிச்சயம் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தொகுதி மக்களுக்கு நல்லது செய்வேன் என்று கூறியுள்ளார்.




 


தற்போது அதே தொகுதியில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அபேதானந்த தாண்டர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெண் வேட்பாளரை பிரதமர் மோடியும் பாராட்டியுள்ளார். கலிதா மாஜி மேற்கு வங்கம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஒரு பெண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News