5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்: யார் யார் ஆட்சியை பிடிப்பார்கள்?
5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை எண்ணப்படுகிறது. இதனால் நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தீர்மானிப்பதில் 5 மாநில சட்டமபை தேர்தல்கள் மிகவும் முக்கிய வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச் 10) எண்ணப்படுகிறது.

தற்போது 5 மாநிலங்களில் பஞ்சாப் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்றது. இதனிடையே இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை பாஜகவே மீண்டும் கைப்பற்றும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 403 இடங்களை கொண்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இரவுக்குள் அனைத்து தொகுதிகளின் முடிவுகள் தெரிந்துவிடும்.
அதே போன்று உத்தரபிரதேசத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களையும் பாஜகவே தக்க வைக்கும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றது. எது எப்படியே 12 மணிக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்பதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக காணப்படுகிறது.
Source: Daily Thanthi
Image Courtesy: Swarajya