தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் வருகை ஏன்? பாஜக தலைவர் என்ன சொல்கிறார்.!
தமிழகத்திற்கு மத்திய அமைச்சர் வருகை ஏன்? பாஜக தலைவர் என்ன சொல்கிறார்.!
வருகின்ற 21ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரும்பொழுது, 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவே மத்திய உள்துறை அமித்ஷா தமிழகம் வருகிறார் என்றும் அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்பார் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு திடீரென்று அமைச்சர் வருகையால் திமுகவை சேர்ந்த கூட்டணி கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளனர். ஏற்கனவே தமிழக தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரை நடத்துவதால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதனை தடை செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இவர்கள் எதிர்ப்பதால் வேல் யாத்திரை கைவிடப்படாது என்று மாநிலத் தலைவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.