விதிமுறைகளின்படி அந்த அமைப்பில் பாதி வார்டுகள் (75) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மேயர் பதவியும் இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல BC, SC, ST-க்களுக்கு என வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கே ST பிரிவு மக்கள் கை 1.33% மட்டுமே. எனவே, அவர்கள் இரண்டு இடங்களை பெறுகிறார்கள். SC மக்கள் தொகை 6.6% ஆகும். இதன் காரணமாக அவர்கள் 10 இடங்களை GHMC-யில் பெறுகிறார்கள். 34% இடங்கள் பின்தங்கிய BC சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் BC என்பது தேசிய அளவில் OBC ஆகும்.
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகரின் மதரீதியான மக்கள் தொகை விபரம்:
ஹிந்துக்கள் - 64.93 %
முஸ்லிம்கள் - 30.13 %
கிறிஸ்தவர்கள் - 2.75%
மத அடிப்படையில் ஒதுக்கீடுகள் எதுவும் கிடையாது. ஹைதராபாத் ஒரு பெரிய நகரம். இது பழைய ஹைதராபாத் நகரமான நிஜாமை மற்றும் குறிக்காது. நடுத்தர மக்கள் ஆதிக்கம் மிகுந்த செகந்திராபாத் மற்றும் மாநிலத்தின் IT துறையின் மையமாக, பொருளாதார இயந்திரமாக இருக்கும் சைபராபாத் ஆகியவற்றையும் சேர்த்தது. படஞ்செரு மற்றும் மல்கஜ்கிரி சட்டமன்ற தொகுதி, சில கிராமப்புறங்களும் இதில் அடங்கும். இவையும் விரைவாக நகரமயமாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
GHMC-யில் உள்ள 150 வார்டுகளில் 24 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
இன்றைய ஆளும்கட்சியான TRS நிலைமை 2009-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தில் மிகவும் மோசமாக இருந்தது. டெபாசிட் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் முதல் GHMC தேர்தலில் அது போட்டியிடவே இல்லை.
முதல் முதலில் GHMC தேர்தல்கள் நவம்பர் 2009-இல் தான் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் MIM கட்சிகள் சேர்ந்து ஹைதராபாத்தை மாநகராட்சியை கைப்பற்றின. அடுத்த தேர்தல் வரை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு இந்தக் கட்சிகளில் இருந்து தான் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆளும் கட்சியின் காரணமாக இரண்டு ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு இரண்டாவது GHMC தேர்தல் 2016-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன.
MIM கட்சியை தவிர்த்து மீதமுள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தையும் விளாசித் தள்ளியது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (TRS). இப்படிப்பட்ட ஒரு அற்புதமான வெற்றிக்கு காரணமாக அப்போதைய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் மற்றும் முதல்வரின் மகனுமாகிய கே டி ராமாராவ் பாராட்டப்பட்டார்.
இந்த வெற்றியை பெற TRS, முஸ்லிம்கள் மற்றும் அனைத்து பிரிவுகளின் ஆதரவையும் பெற வேண்டியிருந்தது. இந்த வெற்றிகளுக்கு பிறகு தன்னுடைய சொந்த கட்சியினரை மேயராகவும் துணை மேயராகவும் TRS பெற்றது.
இதன் பிறகு, 2019 லோக்சபா தேர்தல்களில் TRS மோசமாக செயல்பட்டது. வாக்கு சதவீதம்:
TRS 31.5%
AIMIM: 13.2%
காங்கிரஸ் 25.5%
பா.ஜ.க 27.4% வாக்குகளைப் பெற்றது.
இந்த தேர்தலில் களத்தில் இருக்கும் முக்கியமான கட்சிகள்
TRS
TRS சட்டசபையில் ஆதிக்கம் செலுத்துகிறது. அங்கே தலைவர்களுக்கு பஞ்சம் இல்லை. அனைத்து சமூகங்களுக்கும், சாதிகளுக்கும் அங்கே இடம் உண்டு. GHMC எல்லைக்குள் அவர்களுக்கு 15 எம்.எல்.ஏ-க்கள் உண்டு. ஆனால், 2019 தேர்தல்களில் செகந்திராபாத் லோக்சபா இடத்தை வெல்லத் தவறியது.
அமைச்சராகவும், ஒரு சக்திவாய்ந்த தலைவராகவும் இருக்கும் முதல்வரின் மகன் KT ராமாராவுக்கு மறுபடியும் GHMC-யைக் கைப்பற்றும் பிரசாரத்தின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 100 இடங்களில் வெற்றி பெறத் திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வருகிறது. இதற்கு ஏற்ப TRS ஏற்கனவே சொத்து வரிகளை குறைப்பதாக அறிவித்துள்ளது.
ஒரு காலத்தில் TRS கோட்டையாக கருதப்பட்ட டுபாக்காவில், சமீபத்தில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்தது அவர்களின் மன உறுதி குறைந்திருந்தாலும், தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் நகரம் கண்ட முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் மக்களுக்கு நினைவுபடுத்த முடியும் என்று அரசு நம்புகிறது. தங்களை மிகவும் பிரபலமாக்கிய நலத்திட்டங்களை மறுபடியும் ஞாபகப்படுத்துகிறது.
TRS-க்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், ஒரு இடத்தை வென்றெடுக்க அங்கே நிறைய போட்டியாளர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் பல கட்சிகளில் இருந்தும் தலைவர்களை அவர்கள் எடுத்துக்கொண்டனர்.
ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, ஹைதராபாத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை மோசமாக கையாண்டது, அந்த வெள்ளத்தினால் நகரமே மூழ்கி, உள்கட்டமைப்பு பாழாகி, சாலை வசதிகள் மோசமடைந்தது போன்ற விவகாரங்கள் கண்டிப்பாக எழுப்பப்படும்.
தேர்தலில் வெற்றி பெற அவர்கள் நம்புவது TRS-இன் மகனாகிய KTR, அமைச்சர்கள் ஸ்ரீநிவாஸ் யாதவ், சபீதா இந்திரா ரெட்டி, துணை சபாநாயகர் பத்மா ராவ் ஆகியோரையே.
பா.ஜ.க
பா.ஜ.க வெற்றி பெற என்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்து வருகிறது. நான்கு லோக்சபா இடங்களை கைப்பற்றிய பிறகு தாங்கள் தான் தெலுங்கானாவின் அடுத்த மாற்று சக்தி என்று நிரூபிக்க தயாராகி வருகிறது. 2019 செகந்திராபாத் மக்களவைத் தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றனர்.
2018 சட்டமன்ற தேர்தல்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றதையும் தாண்டி அனைத்துக் கட்சிகளிலும் இருந்து தலைவர்களையும், பல சமூகங்களை சேர்ந்தவர்களையும் தங்கள் வசம் சேர்த்து, ஹைதராபாத்தில் தங்களுடைய செல்வாக்கை வளர்க்கப் பாடுபட்டு வருகிறது.
டுபாக்காவில் அவர்கள் அடைந்த வெற்றி அவர்களுடைய மன உறுதியையும் அதிகப்படுத்தி TRS மற்றும் காங்கிரஸில் இருக்கும் அதிருப்தி தலைவர்கள் வந்து சேர ஒரு நல்ல இடமாக மாறியிருக்கிறது.
சமீபத்தில் வந்த வெள்ளத்தை TRS மோசமாக கையாண்டது, ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது, டல்லாஸ் & இஸ்தான்புல் போல ஹைதராபாத்தை மாற்றுவேன் என்று கூறி அதை நடைமுறைப்படுத்த தவறியது, ஆகியவற்றை குறித்து கேள்வி எழுப்ப பா.ஜ.க தயாராக உள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் ஒன்று என 150 தேர்தல் அறிக்கைகளையும், ஹைதராபாத் மொத்தத்திற்கும் ஒன்று என மொத்தம் 151 தேர்தல் அறிக்கைகளை வெளியிட பா.ஜ.க தயாராக உள்ளது. நல்லபடியாக வெற்றி பெற்று பல வார்டுகளில் இரண்டாவது இடத்திற்கு பா.ஜ.க வந்தால் கூட அது பா.ஜ.க-விற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இங்கே நட்சத்திர பேச்சாளர்கள், மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, கரிம்நகர் எம்.பி-யும் மாநில பா.ஜ.க தலைவருமான பாண்டி சஞ்சய், முன்னாள் கவுன்சிலர் ராமச்சந்திர ராவ் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒற்றை எம்.எல்.ஏ ராஜா சிங் ஆகியோர் அவர்.
மேலும் ஜன சேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாணின் ரசிகர்கள் மற்றும் காபு ஜாதியை சேர்ந்த வாக்காளர்களிடம் இருந்து வாக்குகளை பெறலாம் என நம்புகிறது பா.ஜ.க. இதுபோலவே இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் பா.ஜ.க தலைவர்கள் இங்கு வந்து பிரச்சாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய ஹைதராபாத்தில் 45 இடங்கள் உள்ளன. MIM 2009-ல் இங்கு 43 இடங்களையும் 2016-ல் 44 இடங்களையும் வென்றது. இப்பொழுது 40 இடங்களை மீண்டும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய நகரத்தின் பெரும் பகுதிகளில் MIM-கிற்கு சரியான மாற்று இல்லை. சில வார்டுகளில் இழுபறியாக அமையலாம். ஆனால் வெற்றியை பெற முடியுமா என்று தெரியவில்லை.
தேர்தலில் ஒருவருக்கொருவர் 'நட்பு சண்டையில்' ஈடுபட்டிருந்தாலும் ஏற்கனவே MIM, TRS கட்சிகள் கூட்டாளிகளாவர். தேவைப்பட்டால் GHMC-யை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மீண்டும் கூட்டணி வைக்கலாம். ஆனால் முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து MIM வாக்குகளை எவ்வளவு பெற முடியும்? பழைய ஹைதராபாத்தின் வெளிப்பகுதியிலும் அவர்களால் எவ்வளவு வார்டுகளை வெல்ல முடியும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காங்கிரஸ்
காங்கிரஸுக்கு தோல்வி மேல் தோல்வி ஆக வந்துக்கொண்டிருக்கிறது. தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் தங்களது பல எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தலைவர்களை ஆளும் TRS கட்சியிடம் இடம் பறிகொடுத்தது . GHMC-யில் ஒரே ஒரு காங்கிரஸ் MLA மட்டும் இருந்தார். ஆனால் அவரும் வென்ற பிறகு TRS உடன் சேர்ந்து விட்டார்.
ஆனால் உள்ளூர் பிரிவு எப்படியோ 2019-ல் 3 லோக்சபா இடங்களை வென்றது இங்கே ஒற்றுமையான தலைமை இல்லாதது மிகப் பெரிய பிரச்சினையாகும். தெலுங்கானாவில் இன்னும் இரண்டாவது இடத்தில் தாங்கள் தான் இருக்கிறோம் என்பதை நிரூபிக்க காங்கிரசிற்கு இது மிகப்பெரிய வாய்ப்பாகும்.
TRS-ஐ தோற்கடிக்க முடியாவிட்டாலும் பா.ஜ.க-வை வென்று விட வேண்டும் என்று நினைக்கிறது. எனவே 150 வார்டுகளில் 75-ல் BC வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் 50%-க்கும் மேல் BC வாக்காளர்களே. காங்கிரஸ் எம்.பி ரேவந்த் ரெட்டி, மற்றும் முன்னாள் எம்.பி அஞ்சன் குமார் யாதவ், கொண்டா விஷ்வெஷ்வரர் ரெட்டி ஆகியோர் நட்சத்திர பேச்சாளர்கள்.
TDP
முன் இருந்ததைப் போல் TDP இப்போது இல்லை. தன்னுடைய முந்தைய கட்சியின் ஒரு நிழலாக அது மாறிவிட்டது. ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்த பிறகு தெலுங்கானாவில் ஒரு வலுவான தலைமை இல்லாத காரணத்தினால், அதனுடைய தலைவர்கள், தொண்டர்கள் வாக்காளர்கள் டி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரசுக்கு தாவி விட்டனர்.
சந்திரபாபு நாயுடுவும் ஆந்திராவில் நடக்கும் விவகாரங்களில் மட்டுமே கவனமாக இருக்கிறார். இங்கே பிரச்சாரம் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. TDP தேர்தல்களில் பங்கேற்கும். சில வார்டுகளில் போட்டியும் கொடுக்கும். ஆனால் நண்டமுறி சுஹாசினியை தவிர வேறு எந்த TDP தலைவரும் இங்கே பிரச்சாரம் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
தென் இந்தியாவில் மற்றுமொரு மாநிலத்தில் பா.ஜ.க எவ்வளவு விரைவில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதை GHMC தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டிக் கொடுக்கும்.
Courtesy: Crowdwisdom360.com