எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக தே.மு.தி.க., ஏற்குமா.? பிரேமலதா விஜயகாந்த் பதில்.!
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக தே.மு.தி.க., ஏற்குமா.? பிரேமலதா விஜயகாந்த் பதில்.!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதலமைச்சர் வேட்பாளராக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளது. இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றுக்கொள்வார்கள் என்றால் இன்னும் யாரும் எதுவும் பதில் சொல்லாமல் இருந்து வருகின்றனர்.
அதில் முதலாவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டது. மேலும், பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மவுனம் காத்து வருகின்றது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டம் கூட்டி தேர்தல் கூட்டணி முடிவுகள் பற்றி விரைவில் அறிவிப்போம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேமுதிக, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் மீண்டும் இணையுமா என்பன பற்றி எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருகின்றது. இந்நிலையில், செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கூட்டி விரைவில் எங்களின் முடிவு அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது: தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம். விரைவில் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும். தேமுதிகவை பொறுத்தவரை முரசு சின்னத்தில் தான் போட்டியிம். எங்களுக்கான தொகுதிகளை கண்டிப்பாக கேட்போம். கூட்டணி தரப்பில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் முதலமைச்சர் வேட்பாளரை தேமுதிக ஏற்கும். இவ்வாறு அவர் கூறினார்.