நீங்கள்தான் முதலமைச்சர் வேட்பாளர்.. ரஜினிகாந்திடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்.!
நீங்கள்தான் முதலமைச்சர் வேட்பாளர்.. ரஜினிகாந்திடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்.!
சென்னை, ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் அரசியல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்கு தொலைபேசி வாயிலாக ரஜினியே, ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும் ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனது அரசியல் நிலவரம் பற்றி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆலோசனையின் முடிவில், கட்சி தொடங்குவது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என்றும் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம் என ரஜினி ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி அரசியல் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதால் ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்தில் குவிய தொடங்கியுள்ளனர். இன்று மாலைக்குள் என்ன முடிவு என்று தெரியவரும் என தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.