அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு விநியோகம்.. தலைமை அறிவிப்பு.!

அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு விநியோகம்.. தலைமை அறிவிப்பு.!

Update: 2021-02-24 16:42 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கப்பட உள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது. இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சேர்ந்து விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைக்கின்றனர்.

இன்று முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை தினமும் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அதிமுக கட்சி அலுவலகத்தில் எப்போதும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கூட்டம் காணப்படுகிறது. தேர்தல் களம் தமிழகத்தில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அதிமுக நிர்வாகிகள் இன்றே நல்ல நாள் என்று விருப்ப மனுக்களை வாங்கி செல்வதற்கு குவிந்துள்ளனர்.
 

Similar News