புதுச்சேரி அரசின் சாதனைகளும் வளர்ச்சியும்!

புதுச்சேரி அரசு சாதனைகளையும் சாத்தியமாகி கொண்டிருக்கும் வளர்ச்சி பட்டியலையும் பற்றி காண்போம்.

Update: 2023-12-05 04:45 GMT

பெண்களை பொருளாதாரத்தில் முன்னேற்றச் செய்யும் முயற்சியாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அரசின் எவ்வித உதவி தொகையும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர நிதி உதவி ரூபாய் 1000 வழங்கும் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக புதுச்சேரியில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. பெண் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறந்தவுடன் ரூபாய் 50,000 நிரந்திர வைப்பு நிதியாக 18 வருட காலத்திற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வரவு வைக்கப்படுகிறது.


முதலமைச்சரின் சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப உணவு பங்கீட்டு அட்டதாரர்களும் பயன்பெறும் வகையில் சமையல் எரிவாயு சிவப்பு அட்டைதாரர்களுக்கு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 300 வீதமும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 150 வீதமும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. தமிழ் வளர்ச்சி சிறகம் மீண்டும் தொடக்கம் மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக முதன்முறையாக புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் பாராட்டும் வகையில் கல்வித்தரத்தை மேலும் உயர்த்த அரசின் வரவு செலவுத் திட்டத்தில் 11% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணம், மீன்பிடி தடைக்கால நிவாரணம் மற்றும் மீனவ முதியோர் ஓய்வூதியம் உரிய காலகட்டத்திலேயே வழங்கப்படுகிறது. மீனவ சமுதாய மக்களுக்கான ஈமச்சடங்கு நிதி உதவி ரூபாய் 15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது . அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ் ₹ 18000 வழங்கப்படுகிறது.


தொடர் நோயினால் பாதிக்கப்பட்ட அட்டவணை மற்றும் பழங்குடி மக்களுக்கு மாதம் தரும் ரூபாய் 3000 வயது வரம்பின்றி  அனைவருக்கும் வழங்கப்படுகிறது. கலப்பு திருமணத்தை ஊக்குவிக்க வழங்கப்படும் உதவித்தொகை மூன்று லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கண்பார்வையற்ற 270 மாற்று திறனாளிகளுக்கு இலவச வானொலிகள் மற்றும் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்க உதவும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.


மத்திய அரசின் விபத்து காப்பீட்டு திட்டமான பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து சிவப்பு உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் நபர் ஒருவருக்கு ஆண்டிற்கு செலுத்த வேண்டிய பிரிமியம் தொகையை அரசே செலுத்துகிறது . புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 4,85,680 சிவப்பு உணவு பங்கீடு அட்டைதாரர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். பொலிவுறு நகரத் திட்டத்திற்கு ரூபாய் 156 கோடி செலவில் புதுச்சேரியில் பல்வேறு சாலைகள் மற்றும் கழிவுநீர் வசதிகளை மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


வீடுகளில் மாடி தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் மாடி தோட்டம் அமைக்க தேவையான கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கு வீடு தேடி சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் ரூபாய் 16 லட்சம் செலவில் நடமாடும் கால்நடை சிகிச்சை வாகன சேவை தொடங்கி வைக்கப்பட்டது. பால் உற்பத்தியை பெருக்கிடவும் கால்நடை விவசாயிகளின் வருமானத்தை வெளியிடவும் நடப்பு நிதியாண்டில் 50 விழுக்காடு மானியத்தில் 1600 கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன .புதுச்சேரி அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலமாக சலவை தொழிலாளர்கள், மருத்துவ மரபினர் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு முடி திருத்தும் நாற்காலி, இஸ்திரி பெட்டி  நாதஸ்வரம் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.


இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தடவியியல், மருத்துவம், பொது மருத்துவம், மருந்துகள் ,பொது அறுவை சிகிச்சை ,எலும்பியல் கண் மருத்துவம் ஆகிய துறைகளில் 8 புதிய பட்ட மேற்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கல்வி ஆண்டு முதல் புதிய செவிலியர் கல்லூரி தொடங்கப்பட்டு 60 புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


SOURCE :DAILY THANTHI

Similar News