மத்திய அரசின் திட்டங்களை தமிழாக்கம் செய்ய வேண்டும்.. புதுச்சேரி ஆளுநர் தமிழசை..
மத்திய அரசு சார்பில் கொண்டு வரப்படும் திட்டங்கள் குறித்து புதுச்சேரியில் இருக்கும் மக்களுக்கும் பயனாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை விடுபட்ட பயனாளிகளின் பெயர்களை சேகரிக்கவும் தற்பொழுது வாகன பிரச்சாரம் புதுச்சேரியில் தொடங்கப் பட்டது. புதுச்சேரி அருகே அமைந்துள்ள திம்புநாயக்கன் பாளையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் இந்த நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொண்டார்.
குறிப்பாக மத்திய அரசினால் கொண்டுவரப்படும் பல்வேறு திட்டங்கள் மாநில அரசுதான் செய்தாக ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வுகள் தடுக்கும் விதமாக இத்தகைய பிரச்சார வாகனம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மத்திய அரசின் கொண்டு வரப்படும் திட்டங்கள் ஹிந்தியில் பெயர் இருப்பதன் காரணமாக தமிழக மக்கள் அவற்றை அறிந்து கொள்வதற்கு கடினமாக இருப்பதாகவும் அவற்றை தமிழாக்கம் செய்து அதைத் திட்டங்களை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
அப்போது பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆளுநர் தமிழிசை விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இது பற்றி கூறும் பொழுது, மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களைத் தமிழில் மாற்ற வேண்டும் என்றும் அப்போதுதான் அது மக்களுக்குப் புரியும் என்றும் தெரிவித்தார்.
Input & Image courtesy: News