பழங்குடியின ஏழைப் பெண்களின் திருமண உதவித் தொகை ஒரு லட்சமாக உயர்வு - புதுச்சேரி அரசு!

ஏகப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை அறிமுகம் செய்து மாஸ் காட்டுவதில் புதுச்சேரி அரசுக்கு இணையில்லை. புதுச்சேரி அரசின் மீண்டும் ஒரு நலத்திட்டத்தைப் பற்றி காண்போம்.

Update: 2023-12-16 04:00 GMT

புதுச்சேரி அரசு மக்களுக்காக செய்துள்ள நலத்திட்டங்கள் ஏராளம். மக்களின் நலனுக்காகவே ஒவ்வொன்றையும் அயராது யோசித்து செயல்படுத்தி வரும் புதுச்சேரி அரசு மீண்டும் ஒரு நலத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. படிக்கும் மாணவர்கள், கைவினை கலைஞர்கள், முதியவர்கள் நோயாளிகள், பெண்கள், ஏழைகள் என்று ஒவ்வொரு தரப்பினருக்காகவும் யோசித்து பல நலத்திட்டங்களை புதுச்சேரி அரசு செயல்படுத்திக் கொண்டே வருகிறது.


புதுச்சேரி மாநிலத்தில் பழங்குடியின ஏழைப்பெண்களின் திருமண உதவித்தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் ஆகிய 5 திட்டங்களின் வாயிலாக பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் திருமண உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது.


படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும், அதற்கு கீழ் கல்வித்தகுதி பெற்ற பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ. 25 ஆயிரம் ரொக்கபணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் பழங்குடியின ஏழைப்பெண்களின் திருமண உதவித்தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதில், முதற்கட்டமாக 392 பெண்களுக்கு ரூ.1லட்சம் வழங்கவுள்ளதாகவும், இந்த திட்டத்திற்காக ரூ.3.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News