தேசிய அளவிலான நடன போட்டி.. வெற்றி பெற்ற புதுச்சேரி மாணவியை வாழ்த்திய முதல்வர்..
சர்வதேச அளவிலான இளைஞர் முகாமில் பங்கேற்ற புதுச்சேரி குழுவினரை முதல்வர் ரங்கசாமி பாராட்டினார். இந்தியாவில் தற்போது சர்வதேச அளவிலான இளைஞர் முகாம் நடை பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் சர்வதேச அளவிலான இளைஞர் முகாமை ஏற்பாடு செய்து இருந்தது. ஹரியானா மாநிலம் வல்லபகரில் சர்வதேச அளவில் இளைஞர்களுக்கான தலைமை பயிற்சி முகாம் கடந்த அக்டோபர் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. இதில், இந்தியாவில் இருந்து 22 மாநிலங்களை சேர்ந்த 185 பேரும், இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா, பெரு,நேபாளம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இந்திய அளவில் புதுச்சேரி மாநிலம் சார்பாக தேசிய இளைஞர் திட்ட மாநில செயலாளர் ஆதவன் தலைமையில் புதுச்சேரி இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். தேசிய அளவில் நடந்த நடனப் போட்டியில் புதுச்சேரி யோகலட்சுமி முதல் பரிசை பெற்றார். இக்குழுவினர் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா கேட்டில் நடந்த 'என் மண் என் தேசம்' நிகழ்ச்சியில் பங்கேற்று புதுச்சேரி திரும்பினர்.
கலைத்திறன் போட்டியில் தேசிய அளவில் முதல் பரிசு பெற்ற மாணவி யோகலட்சுமியை முதல்வர் ரங்கசாமி பாராட்டினார். இதில் வெற்றி பெற்ற மாணவி யோகா லட்சுமி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை நேரடியாக சந்தித்து பாராட்டுகளை பெற்று இருக்கிறார்.
Input & Image courtesy: News