பழங்குடியின மக்களை தரையில் அமர வைத்த விவகாரம்.. கேள்வி கேட்டு ரைடு விட்ட புதுச்சேரி ஆளுநர்..

Update: 2023-11-17 03:09 GMT

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர், முதல்வர் பங்கேற்ற பழங்குடியினர் தின விழாவில் பழங்குடியின மக்கள் தரையில் அமர வைக்கப்பட்டு இருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. விழாவில் அதிகாரிகளை அழைத்து கடுமையாக விமர்சித்து விளக்கம் கேட்டு ஆளுநர், முதலமைச்சர் ரைடுவிட்டனர். இந்த நிலையில் சிறப்பு விருந்தினர்களாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, மாவட்ட ஆட்சியர் மற்றும் பழங்குடியின மக்கள் என்று அனைவரும் கலந்து கொண்டனர்.


கம்பன் கலை அரங்கில் நடந்த இந்த விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் பழங்குடியின மக்களின் பொருட்களும் கண்காட்சியும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த விழா நடைபெற்ற கம்பன் கலை அரங்கில் சுமார் 300 பேர் மட்டுமே அமரக்கூடிய அளவிற்கு நாற்காலிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பழங்குடியின மக்கள் அதிகமாக இந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணமாக அவர்கள் தரையில் உட்கார வைக்கப்பட்டிருந்தார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்து இருந்தது.


இந்நிகழ்ச்சிக்கு வந்த பிறகு முதல்வர் மற்றும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் இது குறித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை கேட்டார்கள். பிறகு அவர்களுக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News