கிராமப்புற மாணவர்களின் செயற்கரிய சாதனை - 'ஆசாதிசாட்'

கிராமப்புற மாணவர்களால் வடிமைக்கப்பட்ட 'ஆசாதிசாட்' செயற்கைகக்கோள்.

Update: 2022-08-04 09:00 GMT

750 கிராமப்புற மாணவர்கள் வடிவமைத்த 'ஆசாதி சாட்' செயற்கைக்கோள் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

மாணவர்கள் மற்றும் நிறுவனங்கள் தயாரிக்கும் சிறிய வகை செயற்கை கோள்கள் வணிகரீதியில் விண்ணில் ஏவுவதற்கான புதிய வகையில் எஸ். எஸ். எல்.வி ராக்கெட் டை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்துள்ளது இந்த ராக்கெட் மூலம் மலிவான மற்றும் விரைவாக சிறிய செயற்கை கோள்களை விண்ணில் ஏவ முடியும்.

குறிப்பாக பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கு ஆகும் செலவில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுக்கு செலவாகும். அதேபோல் 6 பேர் கொண்ட குழு இணைந்து இரண்டு மாதங்களில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வடிவமைக்கும்.

ஆனால் ஆறு பேர் கொண்ட குழுவால் 7நாட்களில் எஸ்.எஸ். எல்.வி ரக ராக்கெட்டை வடிவமைத்து விட முடியும்.அதனுடைய முதல் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 7ஆம் தேதி 9:18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இதில் இந்தியாவின் செயற்கைக் கோள்களில் ஒன்றான இ.ஓ.எஸ்-2 யை. எடுத்துச் செல்கிறது இது பல்வேறு புவியியல் தகவல் அமைப்புக்கான பயன்பாட்டு வடிவங்கள் வழங்கும் பணியை மேற்கொள்ளும் .

இதற்காக 6 மீட்டர் பரப்பளவிலான பகுதியை தெளிவாக படமெடுக்கும் நவீன அகச்சிவப்பு கேமராவைக் கொண்டு செல்லும்.

142 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பத்து மாத கால ஆயுளை கொண்டது. இது தவிர 750 கிராமப்புற மாணவர்களால் உருவாக்கப்பட்ட 'ஆசாதி சாட்' என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு கொண்டு செல்கிறது. இந்த ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்வையிடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப் படுகிறார்கள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.





 


Similar News