ரிப்பன் மாளிகையில் "தமிழ் வாழ்க" பெயர் பலகை நீக்கப்பட்டதா? பேஸ்புக் போராளிகள் கிளப்பிவிட்ட வதந்தி!

Update: 2021-04-16 02:00 GMT

சென்னையில் இருக்கும் பாரம்பரியமிக்க கட்டிடங்களில் ஒன்றாக ரிப்பன் மாளிகை விளங்குகிறது. லோகநாத முதலியார் என்பவரால், 1909 ஆம் ஆண்டு தொடங்கி, 1913 ஆம் ஆண்டு வரை இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டடது.

உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீர்த்திருத்தங்களை மேற்கொண்ட ரிப்பன் பிரபுவின் நினைவாக இக்கட்டிடத்திற்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாரம்பரியமிக்க இந்த வெள்ளைநிற கட்டிடத்தில்தான், சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், ரிப்பன் மாளிகையில் இயங்கி வருகிறது. ரிப்பன் மாளிகையில், மேயர், கமிஷனர், இணை, துணை கமிஷனர் அலுவலகங்கள் இயங்கினாலும், துறை அலுவலகங்கள், ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தில் இயங்கி வருகின்றன. அனைத்து அலுவலகங்களையும், ஒரே கட்டடத்தில் செயல்படுத்தும் வகையில், ரிப்பன் மாளிகைக்கு பின்புறம், ஒரு இணைப்பு கட்டடம் கட்டப்பட்டது. 

தற்போது தேர்தல் நேரம் என்பதால், தேர்தல் குழுக்களை கண்காணிப்பதற்காக ரிப்பன் மாளிகை யில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்கில் "தமிழ் வாழ்க" என்று இருந்த பெயர் பலகை  அரசால் நீக்கப்பட்டு இருப்பதாக நிறைய பதிவுகளை பார்க்க முடிகிறது.

பராமரிப்பு பணிகளுக்காக பெயர் பலகை கீழே இறக்கப்பட்ட நிலையில், அதற்குள் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி மக்களை திசை திருப்பி வருகிறது ஒரு கும்பல்.

மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு, அதில் அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வதை மட்டுமே, ஒரு கட்சி சார்பு ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றன. 


Similar News