"சிவபெருமானே கிறிஸ்தவ நாடுகளை ஆசீர்வதியும்"- சர்ச்சில் போஸ்டர் ஒட்டி மாஸ் காட்டிய இந்து முன்னணி.!

Update: 2021-04-21 02:19 GMT

தேர்தலில் யார் வெற்றி பெறச் போகிறார்கள் என்று அறிய இன்னும் சில நாட்களே உள்ளன. இப்போது இன்னார் வெற்றி பெறுவார் என்று யாரும் உறுதியாகக் கூற முடியாவிட்டாலும் குறிப்பிட்ட நபர்களும் அமைப்புகளும் பதவியேற்று விட்டது போல் மிதப்பில் ஆடி வருகின்றனர். அந்த வகையில் "இயேசுவே தமிழ்நாட்டை ஆசீர்வதியும்" என்று அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் சில நாட்களுக்கு முன் தமிழகம் முழுதும் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அச்சகம், அச்சடித்தவர் அல்லது அமைப்பு போன்ற எந்தத் தகவல்களும் இல்லாமல் மொட்டைக் கடுதாசி போல் அச்சடிக்கப்பட்ட இந்த போஸ்டர்கள் கோவில்களிலும் ஒட்டப்பட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பல இந்து அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு போஸ்டர்கள் நீக்கப்படவில்லை என்றால் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தன.

முதலில் அகில பாரதிய இந்து மகாசபா "சர்வலோகங்களுக்கும் ஈஸ்வரனாகிய சிவபெருமானே ஜெருசலேமைக் காப்பாற்றும்" என்று அச்சடித்து ஏற்கனவே ஒட்டப்பட்ட போஸ்டர்களின் அருகில் ஒட்டியது. அதன் பிறகும் மிஷனரி அமைப்புக்கள் ஒட்டிய போஸ்டர் எதுவும் நீக்கப்படாத நிலையில், தற்போது இந்து முன்னணியும் பதிலடி போஸ்டர்களை ஒட்டியுள்ளது.


மிஷனரி அமைப்புக்கள் கோவிலில் இயேசுவே ஆசீர்வதியும் என்று ஒட்டிய போஸ்டர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்து முன்னணி சர்ச்களில் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளது. அந்த போஸ்டரில் "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் 5,77,829 பேர் கொரோனாவில் மரணம். பிரேசிலில் 3,53,437 பேர் மரணம். சிவபெருமானே கிறிஸ்தவ நாடுகளை ஆசீர்வதியும்" என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.


இவற்றைப் பார்க்கும் மக்கள் எந்நாட்டவர்க்கும் இறைவனான ஈஸ்வரன் உலகில் உள்ள அனைவரையும் ரட்சிக்க வேண்டும் என்ற பரந்த நோக்கத்துடன் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களுக்கும் தமிழகத்தில் மத மாற்றத்தை அதிகரிக்கும் நோக்கில் 'இயேசுவே தமிழ்நாட்டை ஆசீர்வதியும்' என்று ஒட்டப்பட்ட போஸ்டருக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று விமர்சித்து வருகின்றனர்.


Tags:    

Similar News