தொடர்ந்து மக்களை பீதியில் இருக்க வைக்கும் தமிழக ஊடகங்கள்! ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் பிரித்துக்கொடுப்பதில் உண்மை நிலை என்ன?

Update: 2021-04-28 01:00 GMT

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தியது. இதில், ஆக்ஸிஜன் உற்பதிக்கு மட்டும் ஆலையை திறக்கலாம் என்று கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் ஒத்துக்கொண்டதை அடுத்து, ஆக்ஸிஜன் உற்பத்திக்காக 4 மாதங்களுக்கு ஆலையை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க கோரிய வேதாந்தாவின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து நீதிமன்றம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஆலையை இயக்க வேண்டும்; வேறு தேவைக்காக ஆலையை இயக்கக்கூடாது என தெரிவித்த நீதிமன்றம், ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசிடம்தான் கொடுக்க வேண்டும் என்றும், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசுதான் பிரித்து கொடுக்கும் என்றும் கூறியது.

ஸ்டெர்லைட்டில் இருந்து வரும் ஆக்சிஜனில் தமிழகத்துக்கு முன்னுரிமை கொடுக்க முடியாது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் சொன்னதாக ஒரு செய்தி தீயாக பரவி வருகிறது. இது மிகவும் தவறான தகவலாகும்.

தனியார் நிறுவனங்களிடமிருந்து ஆக்சிஜன் கொள்முதல் கொள்கை ரீதியாக மத்திய அரசு மட்டுமே செய்ய முடியும். மொத்தமாக கொள்முதல் செய்து மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கும். இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழக்கம்தான். அப்படி பார்த்தால் தடுப்பூசி தெலுங்கானாவில் உற்பத்தி ஆகிறது. இதுவரை மத்திய அரசுதான் கொள்முதல் செய்து கொடுத்து வருகிறது. இதில் தெலுங்கானா எங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சர்ச்சையை உண்டாக்கவில்லை.

ஆனால் ஒரு சில தமிழக ஊடகங்கள் வேண்டுமென்றே மக்களை குழப்ப இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. 

Similar News