இந்திய குடிமகனே கிடையாதா? தமிழக நிதி அமைச்சரின் குட்டு வெளிப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்!
தமிழக நிதித்துறை அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழக கோவில்கள் விவகாரத்தில் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவின் கோரிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ''இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்வது முட்டாள்தனமானது. இதுபோன்ற கோரிக்கை விடுபவர்கள் இந்த சமூகத்தின் நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
இந்து கோவில்களை அறநிலையத்திடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் சொன்னதால், அவரது ஈஷா யோகா மையத்தையும் அரசு கைப்பற்ற வேண்டும் என்ற குரல்கல் வலுத்து வந்த நிலையில், அமைச்சரின் இந்த பேட்டி ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் திடீரென பின்வாங்கியதற்கு காரணம் இது தான் எனக்கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், தகவல்கள் திரட்டிய வகையில் PTR இந்திய குடியுரிமையை சரண்டர் செய்துவிட்டு , வெளிநாட்டு குடியிரிமை பெற்றுவிட்டார்.
இப்போது OCI (Overseas citizen of India) card holder. ஒரு OCI card holder சட்டப்படி தேர்தலில் போட்டியிடக்கூடாது. இவர் OCI card holderஆக இருக்கும் பட்சத்தில் இவரை தகுதி நீக்கம் செய்து சட்டப்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிறகு இவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறியதன் காரணமாக, இந்திய மண்ணில் வாழ தகுதி அற்றவர் என்று சான்றழித்து நிரந்தரமாக நாடு கடத்தலாம்" எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை மறைக்க பின்வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் உண்மை தன்மை இன்னும் நிரூபிக்கப்படாத நிலையில், பலரும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிர்ந்து வருகின்றனர்.