"பசிக்கிறதா எடுத்து சாப்பிடுங்கள்" - கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு மாம்பலத்தில் இலவச உணவு!

Update: 2021-05-26 05:10 GMT
"பசிக்கிறதா எடுத்து சாப்பிடுங்கள்" - கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு மாம்பலத்தில் இலவச உணவு!

தற்போது தமிழ்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல தள்ளு வண்டி வியாபாரிகள் வியாபாரம் செய்ய இயலாமல் தவித்து வருவதால் அவர்களது  வாழ்வாதாரம் மிகவும் பாதித்து வருகிறது.

இவ்வாறு இருக்கையில் மாம்பலத்தில் தள்ளு வண்டியில் சுண்டல், வடை விற்று தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வந்த நபர், தற்போது இந்த கொரோனா காலத்தில் பல ஏழை மக்கள் உணவின்றி தவித்து வருவதால் தன்னால் முடிந்த அளவுக்கு உணவு, தண்ணீர் ஆகியவற்றை இலவசமாக ஏழை எளியோர்க்கு வழங்கி வருகிறார். இவரின் இந்த செயலை  பார்த்து பலரும் அவருக்கு சமூக ஊடகத்தில் தங்களுடைய பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.


இந்த கடினமான காலத்திலும் அவருடைய ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் தன்னால் முடிந்த அளவு ஏழை  மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று அவருடைய நல்ல மனது நம்மில் எத்தனை பேருக்கு இருக்கும் என்பது மிக பெரிய கேள்வி. இந்த பூமியில் இவ்வாறு சில நல்ல மனம் கொண்ட மனிதர்கள் இருப்பதால் இந்த சமூகத்தில் பெரும் நம்பிக்கை வருகிறது.

Tags:    

Similar News