பாகனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய யானை - இணையதளத்தில் வைரலாகும் வீடியோ..!

Update: 2021-06-04 15:24 GMT

கேரளாவில் பாகன் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவருக்கு யானை கண்ணீர் அஞ்சலி செலுத்தும் காட்சி அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


கேரளா மாநிலத்தில் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஓமன சேட்டன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வளர்த்து வந்த கஜ வீரன் பிரம்மதத்தன் என்ற யானை அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. 25 ஆண்டுகாலம் தன்னுடன் இருந்த பாகன் உயிரிழந்த சோகத்தில் இருந்த அந்த யானை நீண்ட நேரம் அவரை பார்த்தபடியே நின்று கண் கலங்கியது.

கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினரின் உடலைக் கூட வாங்காமல் மருத்துவமனையிலேயே விட்டுச் செல்லும் மனிதர்கள் வாழ்ந்து வரும் இந்த காலகட்டத்தில் ஐந்தறிவு ஜீவன் என்று நம்மால் அழைக்கப்படும் இது போன்ற வளர்ப்பு பிராணிகளிடம் இருக்கும் அன்பும் இரக்கமும் ஆறு அறிவு ஜீவன் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் மனிதர்களுக்கு வர வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது. யானை தனது பாகனுக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

Tags:    

Similar News