ட்விட்டரின் சர்வாதிகாரம் : நைஜீரியாவை போல இந்தியாவும் ட்விட்டரை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை..!

Update: 2021-06-05 05:57 GMT

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்த ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர் நிறுவனம் நைஜீரிய ஜனாதிபதியின் ட்வீட்டை நீக்கியதற்காக நைஜீரிய அரசு ட்விட்டரை தடை செய்தது போல இந்தியாவிலும் தடை செய்யப்பட வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் தங்கள் கருத்துகளை ட்விட்டர் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் காங்கிரஸில் டூல்கிட் விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் மோதல் நிலவியது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிவிட்டர் நிறுவனத்தில் ப்ளூடிக் வசதி போலி கணக்கை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு வசதியாகும். இந்நிலையில் இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கின் ப்ளூ டிக் வசதியை நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய துணை ஜனாதிபதி ட்விட்டர் கணக்கு மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்களின் டிவிட்டர் கணக்கில் உள்ள ப்ளூ டிக் வசதியையும்  நீக்கியுள்ளது

மற்றும் பிற பிரபல ட்வீட்டர்களின் கணக்குகளின் ப்ளூ டிக்கையும் ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.








ஓய்வூ பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சய் தீக்ஷித் மற்றும் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களின் கணக்குகளில் இருந்தும் ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை நீக்கியுள்ளது. இதனால் வேண்டுமென்றே பா.ஜ.க ஆதரவாளர்கள் மற்றும் தலைவர்களின் கணக்கை‌ மட்டும் குறிவைத்து பாகுபாட்டுடன் நடந்து கொள்வது இந்தியாவின் சட்டதிட்டங்களை மீறும் செயலாக இருப்பதாக ட்விட்டர் பயனாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ப்ளூ டிக் வந்த போதும், தனது சட்ட திட்டங்களை மதிக்காத ட்விட்டரை, நைஜீரிய அரசு தடை செய்தது போல் இந்திய அரசும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Tags:    

Similar News