சிவபெருமான் கையில் மது பாட்டில் : இன்ஸ்டாகிராம் மீது வழக்கு பதிவு!

Update: 2021-06-10 10:36 GMT
சிவபெருமான் கையில் மது பாட்டில் : இன்ஸ்டாகிராம் மீது வழக்கு பதிவு!

பல இளைஞர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இன்ஸ்ட்ராகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள் அவர்களுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாகி விட்டது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சிவபெருமான் கையில் மது பாட்டில் வைத்தது போல் ஸ்டிக்கர் செய்ததற்காக இன்ஸ்டாகிராம்  மீது வழக்கு பதிவு செய்யபட்டது.   


இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்டிக்கர் வரிசையில் சிவன் என்று தேடினால் சிவபெருமான் ஒரு கையில் தொலைபேசியும்  மற்றோரு கையில் மது பாட்டில் வைத்துள்ளது போன்ற ஸ்டிக்கர் வந்துள்ளது. இதனை கண்டு ஹிந்துக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹிந்து மத தெய்வமான சிவனை இழிவுபடுத்தியதால் மற்றும் ஹிந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியதால் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமின்  இந்த செயல் குறித்து டெல்லியில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். டில்லியை சேர்ந்த மனிஷ் சிங்க் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.

Tags:    

Similar News