பாடகி சின்மயி மருத்துவ இரகசியங்களை வெளியிடப்போவதாக மிரட்டிய மருத்துவர், தி.மு.க ஆதரவாளரா.? உண்மையை மூடி மறைக்கும் ஊடகங்கள்!
பாடகி சின்மயியை சமூகவலைதளத்தில் மருத்துவர் ஒருவர் தரக்குறைவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குரல் வழியாக பேசிக்கொள்ளும் கிளப் ஹவுஸ் எனப்படும் சமூக வலைதளத்தில் இந்த ஆடியோ பகிரப்பட்டது.
குழுவில் பேசிய மருத்துவர் அரவிந்தராஜ், பாடகி சின்மயி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், அவர் எந்த மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுகிறார் என்றும் அவருடைய மன நலன் பற்றியும் தனக்கு தெரியும் எனவும் பேசினார்.
இதனைத் தொடர்ந்து அந்த குழுவில் பாடகி சின்மயியும் இணைக்கப்பட்டார். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் அவர்களுக்குள் வாக்குவாதம் வளர்ந்தது. தன்னுடைய தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து மருத்துவர் அரவிந்தராஜ் சமூகவலைத்தளங்களில் பேசுவது ஏன் என்று சின்மயி கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து மருத்துவர் அரவிந்தராஜ் குழுவில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் மருத்துவர் அரவிந்த் ராஜ் மீது சட்டரீதியான புகார் அளிக்க உள்ளதாக பாடகி சின்மயி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
நோயாளி ஒருவரின் மருத்துவ இரகசியங்கள் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், பொது வெளியில் வெளியிடப்போவதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் அவருடைய அங்கீகாரத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர் அரவிந்த் ராஜ் திமுக ஆதரவாளர் என்பதால், ஊடகங்களும் இது குறித்த செய்தியை பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனவும், நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.