தன்னம்பிக்கை இருந்தா, எதுவும் முடியும்: சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்த அருமையான கருத்து!

Update: 2021-07-27 12:55 GMT

சமூக ஊடகங்களில் பல்வேறு நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமானவர்கள் தங்களுக்கு பிடித்த மற்றும் பிறருக்கு உத்வேகத்தைத் தரும் விஷயங்களில் அடிக்கடி பகிர்ந்து கொள்வார்கள். அந்த வகையில், சச்சின் டெண்டுல்கர் அவர்களும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி அற்புதமான பல நேர்மறையான விஷயங்களை பகிர்ந்து இருந்து வருவார். அதே மாதிரி தற்பொழுது திங்களன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வைரல் வீடியோவை பகிர்ந்துள்ளார். அது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. 


மேலும் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தன் காலினால் கேரம் விளையாடிய வைரல் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ முழுவதிலும் ஹர்ஷத் கோதாங்கர் என்ற மாற்றுத் திறனாளி ஒருவர் தனது நண்பர்களுடன் கேரம் விளையாடும் ஒரு காட்சி பதிவாகி இருக்கும். அவருடைய மற்ற நண்பர்கள் தங்களுடைய கைகளினால் கேரம் விளையாடுவார்கள். ஆனால் இவர் மட்டும் தனக்கு கைகள் இல்லை என்ற காரணத்தில் சோர்ந்துவிடாமல், தன்னுடைய கால்களினால் கேரம் விளையாடி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருப்பார். 




இதைப்பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "நம்மால் முடிந்ததை நாம் சாத்தியமாக்க முடியும். எனவே சாத்தியமற்றதற்கும் சாத்தியத்துக்குமான வித்தியாசம் ஒருவரது உறுதிப்பாட்டைப் பொறுத்தது" என்கிறார் சச்சின் டெண்டுல்கர். ஒருவரால் முடியாதது என்று எதுவும் கிடையாது. முடியும் என்று நாம் நம்பினால் அது தனக்கு தன்னம்பிக்கை கொடுத்து, அதை அடைவதற்கான உத்வேகத்தையும் கொடுக்கும் என்றும் அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடம் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

Similar News