சீனாவை மிரளவைத்த புழுதிப்புயல்: திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு இயற்கையின் தாண்டவம்.!
மனிதர்கள் அனைவரும் இயற்கையின் படைப்புகள் என்று கூறுவார்கள். அது நிச்சயம் உண்மை தான். மனிதன் எந்த அளவிற்கு இயற்கையை போற்றி பாதுகாக்கிறான் என்பதைப் பொறுத்து, அந்த அளவிற்கு இயற்கை நம்மை காக்கிறது. இல்லை என்றால் அது தன்னுடைய கோரத்தாண்டவம் மூலம் மக்களுக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்துகிறது. தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விஷயமான காலநிலை மாற்றம் வருங்காலத்தில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். ஏனென்றால் இயற்கையை நாம் சிறிது, சிறிதாக அழித்து கொண்டிருக்கும் போது அது வருங்கால சந்ததியினருக்கு வாழ முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுத்தக்கூடும்.
அந்தவகையில் தற்போது சீனாவின் டன்ஹூவாங் நகரத்தில் 300 அடி உயரத்திற்கு எழுந்த புழுதிப் புயல் காரணமாக, மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கினர். சீனாவில் உள்ள வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள கோபி பாலைவன எல்லையில் அமைந்துள்ள நகரம் தான் டன்ஹுவாங். இந்த நகரத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட புழுதிப்புயல் மக்களைக் கலங்கடித்துள்ளது. சுமார் 300 அடி உயரத்திற்கு திடீரென எழுந்த புழுதிப்புயல், டன்ஹூவாங் நகரத்தைச் சூழ்ந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கினர்.
குறிப்பாக இந்த புழுதிப்புயல் மூலமாக மக்களுக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் குறிப்பாக நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எனவே அங்கு ஏற்பட்ட புழுதிப் புயல் சில மணி நேரத்தில் மொத்த நகரத்தையும் புழுதிப்புயல் சூழும் ஒரு நகரமாக மாற்றியது. குறிப்பாக திரைப்படங்களில் வரும் காட்சிகள் போல அமைந்த இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.