ஆப்கன்: தலிபான்களை எதிர்த்து போராடிய பெண்கள் மீது தாக்குதல்!
தலிபான்களை எதிர்த்து போராடிய பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
ஆப்கானிஸ்தானில் தற்போது முழுமையாக கைப்பற்றிய தலிபான்களை எதிர்த்து அனைத்து மக்களும் போராடி வருகிறார்கள். குறிப்பாக அவர்களை எதிர்த்து பெண்கள் மிகவும் துணிச்சலான போராடத் துணிந்து இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் அரசியலில் பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக பெண்கள் நடத்தும் போராட்டம் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பலராலும் பேசப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து ஆப்கான் ஊடகங்கள் தரப்பில் இருந்து கூறுகையில், "தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கும் அரசியல் உரிமை வேண்டும் என்று பெண்கள் காபூலில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அதிபர் மாளிகையை நோக்கி செல்லவிடாமல் தலிபான்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இக்கூட்டத்தில் இருந்த சமூக செயற்பாட்டாளரான நர்கிஸ் என்பரை தலிபான்கள் தாக்கியதில் அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. மேலும் பேரணியை கலைக்க வானை நோக்கி துப்பாக்கியால் தலிபான்கள் வானத்தை நோக்கி சுட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்" என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு ஆப்கானில் உள்ள பெண்கள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் பொதுமக்கள் 17 பேர் பலியாகி இருப்பதற்கும் தற்பொழுது கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களுடைய வெற்றிக்காக சுட்டு வீழ்த்தும் இத்தகைய மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள், எப்படி தேசத்தை வழிநடத்த முடியும் என்பது ஆப்கானிய மக்களின் கேள்வியாகவே இருந்து வருகிறது.
Input & Image Courtesy - India Today