பொதுமக்களைக் விண்வெளிக்கு அழைத்துச் சென்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்!
ஸ்பேஸ் எக்ஸ், முதன்முதலாக பொதுமக்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது.;
அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்பொழுது விண்வெளித் துறையில் முன் அனுபவம் இல்லாத 4 அமெரிக்கர்களை முதல் முறையாக விண்வெளி சுற்றுலாவுக்கு வெற்றிகரமாக அனுப்பியது. இந்த ஒரு நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாகப் பேசப்படுகின்றது. ஏனெனில் இதுவரை மிகப்பெரிய பணக்காரர்கள் மட்டும் தான் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஆனால் தற்போது முதல் முறையாக நான்கு பொதுமக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்வெளிக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.
மேலும் இவர்கள் விண்வெளி பயணம் செய்வது இதுவே முதல் முறை. முன் அனுபவம் இல்லாத நான்கு அமெரிக்கர்களை விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் அனுப்பி வைத்தது. அமெரிக்காவின் ஷிப்ட் 4 பேமன்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜார்ட் ஐசக்மேன் தலைமையிலான நான்கு பேர் உடைய குழு விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளது. இவர்கள் பயணம் செய்த விண்கலத்துக்கு, இன்ஸ்பிரேஷன் 4 என பெயரிடப்பட்டுள்ளது. ராக்கெட் விண்ணில் பாய்ந்த 12 நிமிடங்களில் அதன் இரண்டாவது அடுக்கு தனியாகப் பிரிந்து வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப் பாதைக்குள் நுழைந்தது.
பூமியிலிருந்து 575 கி.மீ உயரத்தில் இந்த விண்கலம் அடுத்த மூன்று நாட்களுக்கு உலகத்தை சுற்றி வரும். மூன்று நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பின், அட்லான்டிக் கடலில் பால்கன் ராக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. சுற்றுலா பயணம் இது நாள் வரை அரசின் வாயிலாக பயிற்சி பெற்று, அதிகாரப்பூர்வ பயணத்தை மட்டுமே விண்வெளி வீரர்கள் மேற்கொண்டு வந்தனர். இந்த நான்கு பேரும் விண்வெளிக்கு முதல் முறையாக சுற்றுலா பயணம் மேற்கொண்ட பொதுமக்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
Input & Image courtesy:Times of India