சமூக வலைதளத்தில் வைரலாகும் ஐஸ்கிரீம் ஸ்டிக் இட்லி!
ஐஸ்க்ரீம் ஸ்டிக் இட்லி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நம் அனைவரும் வாழ்வில் ஒவ்வொரு நாளும் புதுமைகளை ஏற்றுக்கொண்டு வருகிறோம். மாறிவரும் தலைமுறைகளின் வித்தியாசமான சிந்தனைகள் மூலம் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு புதுமைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன அந்த வகையில் தற்போது சமையல் துறையில் அதிகமான முறையில், வழக்கமாக நாம் சாப்பிடும் இட்லிக்கு கர்நாடக தலைநகரான பெங்களுருவில் புதிய வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளது. உணவு துறையில் பல புதுமைகள் செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றன. புதுமையான உணவை தயாரிப்பது இப்போது உணவு உலகில் ட்ரெண்டாக உள்ளது.
சமீபத்தில் பட்டர் சிக்கன் பானி பூரி, முதல் மேகி மில்க் ஷேக் வரை அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது மாதிரியான வித்தியாசமான உணவுப்பிரியர்களை குழப்பும் சமீபத்திய வைரலாக இட்லி மற்றும் சாம்பார், சட்னியின் சுவையான காம்போ பேக் தற்போது வினோதமான உணவாக மாற்றப்பட்டு உள்ளது. சட்னி மற்றும் சாம்பர் உள்ளிட்ட சைட் டிஷ்ஷில் இட்லியை நனைத்து சாப்பிடும் வகையில், பெங்களூரில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட்டில் ஐஸ்கிரீம் ஸ்டிக் இட்லி பரிமாறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஐஸ்கிரீம் ஸ்டிக் இட்லியை கலவையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
ஐஸ்கிரீம் ஸ்டிக்கில் இட்லி எப்படி இணைக்கப்பட்டுள்ளதற்கான புதுமையான உணவு தொழில்நுட்பம். பெங்களூரு மற்றும் இந்த நகரத்தின் உணவு கண்டுபிடிப்புகள் எப்போதும்ஒரே மாதிரியானவை என்று குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக இந்த புகைப்படத்தில் 3 ஐஸ்கிரீம் ஸ்டிக் இட்லிகள் ஒரு தட்டில் வைக்கப்பட்டு உள்ள நிலையில், அருகிலிருக்கும் சாம்பார் கிண்ணத்தில் ஒரு ஸ்டிக் இட்லி நனைக்கப்பட்டு உள்ளது. இந்த புகைப்படத்தில் இட்லியின் வழக்கமான காம்போவான தேங்காய் சட்னியும் உள்ளது. வழக்கத்திற்கு மாறான இந்த இட்லி சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை ஏற்படுத்தியது.
Input & Image courtesy:News 18