பணம் இல்லாததால் மணல் மூலம் ஓவியத்தை வரைந்து அசத்தும் பெண்மணியின் வீடியோ !
மணலை வைத்து ஓவியத்தை வரைந்து அசத்தும் பெண்மணியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;
அனைவருக்கும் வாய்ப்புக்களை சமமாகத்தான் கொடுக்கப் படுகின்றது அதை யார் அதை பயன்படுத்துகிறார்களோ? அவர்கள் மட்டும் தான் வாழ்க்கையில் சாதிக்கிறார்கள். அந்த வகையில் தற்போது தனக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், தன்னிடம் என்ன இருக்கிறதோ? அவற்றை பயன்படுத்தி சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் தான் சிரியாவை சேர்ந்த ஜூலியா சயீத் என்ற பெண். இவர் தற்போது மிகவும் தத்துரூபமாக மணற் சிற்பங்கள் செய்து அசத்தி வருகிறார். இவரது சொந்த ஊர் ராக்கா ஆகும். சிறுவயதில் இருந்தே ஓவியங்களில் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
இவர் சிறுவயதில் இருந்து பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்கொண்டு உள்ளாராம். தனது வீட்டில் ஒரு அறை முழுக்க ஓவியங்களை வைத்திருக்கிறார். ஒரு சமயத்தில் சில பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் சூழல் வந்தது. அப்போது தான் சிறு வயதில் இருந்து பயன்படுத்திய ஓவியங்களையும், அதனை வரைய பயன்படுத்திய பொருட்களையும் விட்டுவிட்டு வந்துவிட்டார். அதன் பிறகு அவரால் ஒரு ஓவிய கருவியை கூட வாங்க பணம் இல்லை. அதனால் தான் வரையும் ஓவியங்களுக்கு வண்ணங்களுக்கு பதிலாக மண்ணை பயன்படுத்தலாம் என்று யோசித்தார். ஆரம்ப காலகட்டத்தில் மணல் ஓவியம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், போகப்போக எளிதாக இருந்தது என்று கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மண்ணால் ஓவியம் வரைவது எனக்கு பணத்தை மிச்சப்படுத்துகிறது. முதலில் நான் வேறு வழியின்றி பயன்படுத்தினேன். இப்போது எனக்கு ஓவியம் வரைய வண்ணங்கள் இருந்தாலும், எனக்கு மண்ணை பயன்படுத்தி வரைவது தான் பிடிக்கிறது' என்று அவர் கூறியுள்ளார். இவருடைய இந்த மணல் சிற்பம் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Input & Image courtesy:News 18