ஏர் இந்தியாவை கைப்பற்றிய டாடா நிறுவனத்தில் வைரல் புகைப்படம் !

டாடா நிறுவனத்தை உரிமையாளரான ரத்தன் டாட்டா வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Update: 2021-10-13 13:21 GMT

கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் துறைக்கு விற்க யோசித்து வந்தது. அந்த வகையில் தற்பொழுது, ஏர் இந்தியா டாட்டா குழுமத்தின் கைகளுக்கே சென்றுள்ளது. பெரும் கடனில் தவித்து வந்த ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்த சூழ்நிலையில் இது நிகழ்ந்துள்ளது. முதலில் அரசின் பெரும்பான்மையான பங்குகளை விற்பனை செய்ய முன் வந்த மத்திய அரசு, பின்னர் விமான நிறுவனத்தை முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைப்பது என முடிவெடுத்தது. மேலும் இது தொடர்பான ஒப்பந்தங்கள், பலத்த வார்த்தைகள் நடந்தன. 


தற்பொழுது கடைசியாக 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமத்திடம் மத்திய அரசு விற்பனை செய்தது. இதனை மத்திய அரசும், டாட்டா நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு, டாட்டா நிறுவனம் பற்றிய பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது, ரத்தன் டாட்டா தன்னுடைய சமூகவலைதள பக்கங்களில் டாடா நிறுவனம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கைப்பற்றியதை தொடர்ந்து, விமானம் வடிவிலான கேக் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


மேலும் டாட்டா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறமான சிவப்பு மற்றும் வெள்ளை கலரில், விமானம் போலவே தத்ரூபமாக மும்பையில் அமைக்கப்பட்டுள்ள உணவகத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ரத்தன் டாட்டா, சர் ரத்தன் டாட்டா இன்ஸ்டிடியூட்டையும் டேக் செய்துள்ளார். டாட்டா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் 1932 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விமான நிறுவனம், 1946 ஆம் ஆண்டு ஏர் இந்தியாவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1953 ஆம் ஆண்டு இந்த விமான நிறுவனம் முழுவதுமாக தேசியமயமாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப்பிறகு ஏர் இந்தியா நிறுவனம் தற்போது டாடா நிறுவனத்தினர் சென்றுள்ளது பரபரப்பாக பேசப்படுகின்றது. 

Input & Image courtesy:Businesstoday

 





Tags:    

Similar News