சர்வதேச விஞ்ஞானிகள் பட்டியல்: இடம் பிடித்த தூத்துக்குடி புவியியல் பேராசிரியர்!

சர்வதேச விஞ்ஞானிகள் பட்டியலில் முதல் இடத்தில் தற்போது தூத்துக்குடி புவியியல் பேராசிரியர் உள்ளார்.

Update: 2021-11-01 13:30 GMT

சர்வதேச விஞ்ஞானிகளின் பட்டியலில் தூத்துக்குடியைச் சேர்ந்த புவியியல் பேராசிரியர் டாக்டர். செல்வம் அவர்கள் இடம்பெற்றுள்ளார். இந்த ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னணி பதிப்பகமான எல்சேவியர் PV வெளியிட்ட முதல் 2% விஞ்ஞானிகளின் பட்டியலில் தூத்துக்குடி புவியியல் பேராசிரியர் இடம்பிடித்துள்ளார். V.O.சிதம்பரம் கல்லூரியின் உதவி பேராசிரியராகப் பணியாற்றும் செல்வம் அவர்கள் புவி மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டவர் என்ற அடிப்படையில் 218 ஆவது ரேங்க் பெற்றுள்ளார். 


உலகளவில் மொத்தமாக அனைத்து பாடங்களிலும் 76,58,440 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் பேராசிரியர் செல்வம் அவர்கள் 1,78,847 உலக தரவரிசை இடத்தைப் பெற்றுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஆய்வுக் கட்டுரைகளை செல்வம் வெளியிட்டு வருகிறார். இவற்றில் 37 கட்டுரைகளை நெதர்லாந்தின் எல்சேவியர் PV பதிப்பகம் போட்டிக்கு எடுத்துக் கொண்டது. இது குறித்து பேராசிரியர்கள் செல்வம் கூறுகையில், "ஹைட்ராஜியாலஜி, சுற்றுச்சூழல் அறிவியல், ரிமோட் சென்சிங் மற்றும் புவியியல் தகவல் அமைப்புகள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளேன். 


அவர் ஏழு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் 1486 மேற்கோள்களைப் பெற்று உள்ளேன். உலகின் முதல் 2% கல்வி நிறுவனங்களின் கீழ் வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பெயர் வருவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது" என்று அவர் கூறினார். தமிழகத்தின் முன்னணி பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 பேர், அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 13 பேர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 11 பேர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 3 பேர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் 15 பேர், பெரியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 பேர், சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 3 பேர் என 3 பேர் ஆய்வு செய்தனர். இவர்களுடைய ஆய்வுக் கட்டுரைகளும் எல்சேவியர் PV தரவரிசையில் இடம்பெற்றது. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 11 பேர் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

Input & Image courtesy:Indianexpress

 



Tags:    

Similar News