ஆயிரக்கணக்கான ஆலமரங்களுடன் தீபாவளியைக் கொண்டாடும் ஹைதராபாத் மக்கள் !

ஆயிரக்கணக்கான அலங்காரங்களுடன் தீபாவளியைக் கொண்டாடும் ஹைதராபாத் மக்களின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-02 14:01 GMT

தற்போது மாறிவருகிற இயற்கை சூழலில் மரம் வளர்ப்பது என்பது முக்கியமானதாக இருக்கிறது. உலக அளவில் மரங்கள் அழிக்கப்பட்டு, உலகம் வெப்பமயமாகி வருகிறது. இதனால் தான் அதிகளவு மழை, வெயில், காலநிலை மாற்றங்கள் போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சுற்றுசூழலை பாதுகாப்பதில் மரங்களை வளர்ப்பது முக்கிய பங்காற்றுகிறது. மரமானது சுற்றுசூழலை பாதுகாப்பதோடு காலநிலை மாற்றங்களையும் சரி செய்கிறது. எனவே மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஹைதராபாத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். ஹைதராபாத்தில் செவெல்லா என்ற கிராமம். ஹைதராபாத், மன்னேகுடா நெடுஞ்சாலையில் உள்ள இந்த கிராமத்தில் சுமார் 9,000க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளது. அதில் 1,000-கும் மேல் ஆலமரங்கள் உள்ளது.


இந்த நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கத் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கி இருப்பதால், இந்த மரங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மரங்களின் முன்பு தீபம் ஏற்றி, அவற்றை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இத்தகைய மரங்களை அழிக்கும் திட்டத்தில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில் ஓவியங்கள் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நிஜாம் அரசர்களால் இந்த ஆலமரங்கள் நடப்பட்டதாக கூறப்படுகிறது. 


இந்த மரங்களை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த மரங்களை வெட்டுவதால் இதில் வசிக்கும் பறவைகள் அழியும் நிலை ஏற்படும். இயற்கையை காப்பது தான் நமது கடமை. தற்போது அனைத்து சுற்றுச்சூழல் நிலைமைகளும் மாறிவிட்டன. எனவே சுற்றுசூழலுக்கு எதிரான இந்த திட்டத்தை கைவிடுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று கிராம மக்கள் அனைவரும் கூறுகிறார்கள். 

Input & Image courtesy: News 18


Tags:    

Similar News