உலகின் மிகப்பெரிய காய்கறியை விளைவித்து கின்னஸ் சாதனை !
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய காய்கறியை விளைவித்த நபரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகின் மிகப்பெரிய காய்கறிகள் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடிப்பது வழக்கம். உலகின் மிகப்பெரிய காய்கறிகள் என்ற தலைப்பில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில், இதுவரை கின்னஸ் உலக சாதனை படைத்த காய்கறிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய காய்கறிகளை வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளனர் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பூசணிக்காய், பீட்ரூட், முள்ளங்கி, தக்காளி வரை பல்வேறு பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் அதனை விளைவிப்பவர்கள் புகைப்படங்களும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோவை கின்னஸ் அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது. இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். முன்னதாக ஹாமில்டனுக்கு அருகிலுள்ள கொலின் மற்றும் டோனா கிரெய்க்-பிரவுன் தம்பதியினரின் சிறிய பண்ணையில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அன்று இந்த உருளைக்கிழங்கு இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த தம்பதியினர் தங்கள் கேரேஜில் வைத்து அந்த உருழைக்கிழங்கை கொண்டு சென்று எடை போட்டு பார்த்துள்ளனர்.
அதில் உருழைக்கிழங்கானது 7.9 கிலோகிராம் எடை கொண்டது என்று தெரியவந்தது. இது வழக்கமான உருளைக்கிழங்கை போல அல்லாமல் மிகப்பெரியதாக இருந்துள்ளது. அந்த உருளைக் கிழங்கிற்கு டக் என்று பெயரிட்டனர். இதனை தொடர்ந்து சில வாரங்களில், இந் உருளைக்கிழங்கு மிகவும் பிரபலமாகிவிட்டது. டக்கிற்கு அங்கீகாரம் பெற கின்னஸுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் இந்த தம்பதியினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:Hindustantimes