இந்தியாவில் பொதுவாக பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு இதுதானாம்.!

இந்தியாவில் குறிப்பாக பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளில் ஒன்றாக இது இருக்கிறது.

Update: 2021-11-23 13:23 GMT

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஒருவர் தினசரி பல வெப்சைட்கள், ஆப்ஸ்கள் மற்றும் பிற சர்வீஸ்களில் உள்நுழைந்து உணவை ஆர்டர் செய்வது முதல் ஈ-காமர்ஸ் சைட்டிலிருந்து ஒரு பொருளை வாங்குவது, இன்டர்நெட் பேங்கிங்கை ஆப்ரேட் செய்வது வரை பலவற்றை கையாளுகிறார். இவற்றை பாதுகாப்பாக செய்வதற்கு உதவுகின்றன பாஸ்வேர்ட்கள். ஹேக்கர்கள் என்று சொல்லப்படும் மோசடி நபர்களிடமிருந்து நமது டேட்டா மற்றும் பணத்தை காப்பாற்றி கொள்ள அவர்களால் எளிதில் அண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்ட்களை பயன்படுத்த டிஜிட்டல் போர்டல்கள், காவல்துறை மற்றும் சைபர் கிரைம் நிபுணர்கள் பலமுறை எச்சரித்தாலும் கூட மக்கள் அதை பெரிதாக நினைக்கவில்லை என்பதை NordPass என்ற பாஸ்வேர்ட் மேனேஜர் வெளிப்படுத்தி உள்ளது. 


சமீபத்தில் NordPass நிறுவனத்தின் ஆய்வுப்படி இந்தியாவில் பொதுவாக மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் "password" தான் என்பது தானாம். இந்தியா முழுவதும் password என்பதையே பாஸ்வேர்ட்டாக சுமார் 1,714,646 பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தியாவில் மட்டுமல்ல, password-ஐயே பாஸ்வேர்ட்டாக நிறைய மக்கள் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடாவிலும் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. 


இதை கிராக் செய்ய ஒரு வினாடிக்கும் குறைவாகவே ஆகும் என்பது நிபுணர்களின் எச்சரிக்கை. இதற்கு அடுத்து இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் இரண்டாவது பாஸ்வேர்ட்டாக இருக்கிறது '12345'. இதை பாஸ்வேர்ட்டாக சுமார் 1,289,266 இந்தியர்கள் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. password மற்றும் 12345 இவற்றை தவிர இந்தியர்கள் பயன்படுத்தும் சில பொதுவாக பயன்படுத்தி வரும் சில பாஸ்வேர்ட்கள் 123456, 123456789, 12345678, 1234567890, 1234567, qwerty, abc123 ​'india123', 'xxx', 'iloveyou', 'krishna' மற்றும் 'omsairam' உள்ளிட்டவையாக இருக்கின்றன. 

Input & Image courtesy:News18

 


Tags:    

Similar News