சென்னை வந்த பிரதமருக்கு மத்திய அமைச்சர் முருகன் கொடுத்த புத்தகம் என்ன? இது தான் இணையத்தில் படு வைரல்!
சென்னை வந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். ரயில்வே, சாலைத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார்.
பொன்முடி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஜி.கே.வாசன், சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பிரதமருக்கு நூல் ஒன்றை அளித்தார். அந்த நூலின் பெயர் திருவிளையாடல் புராணம் ஆகும். இந்த நூல் சிவபெருமான் சிறப்பை எடுத்துரைக்கும் நூல் ஆகும். இந்த நூலை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.