இஸ்லாமிய தலைவர்களின் எதிர்ப்பு - இனி பெண்கள் விளம்பரத்திலும் நடிக்க தடை!

Update: 2022-08-07 05:28 GMT

ஐஸ்கிரீம் விளம்பர படம் ஒன்றில் பெண் ஒருவர் நடித்திருந்த நிலையில், விளம்பரங்களில் பெண்கள் நடிக்க தடை விதித்துள்ளது ஈரான் அரசு. விளம்பரம் சர்ச்சையான நிலையில் இந்த உத்தரவை அந்த நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.

ஐஸ்கிரீம் விளம்பரத்தில் பெண் ஒருவர் ஹிஜாபை தலையில் சற்று தள்ளி அணிந்து நடித்திருந்தார். அது மத ரீதியிலான நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருந்ததாக ஈரான் நாட்டின் இஸ்லாமிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஈரானின் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம் இந்த தடையை கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் சார்பில் விளம்பர பட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. 1979 முதல் ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும்.

பெண்களின் மதிப்புகளை அவமதிக்கும் வகையில் விளம்பரம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Similar News