மதமாற்றத்தை ஆதரிக்கும் திருமா! ஜனாதிபதியை இழிவு படுத்தி பேசிய வீடியோ - அரசியலுக்காக இப்படியுமா?
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி திரௌபதி முர்மு பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என்ற போதிலும், பிஜேபி அவரை நியமித்ததால் தமிழக அரசியல் வாதிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். சர்க்கஸ் புலி கூண்டில் அடைக்கப்பட்ட கிளி, கோவில் யானை என்று திமுகவின் கூட்டணி காட்சிகள் திட்டியிருக்கிறார்கள். கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் இந்துக்கள் ஒன்று சேர்வதை விரும்பாத அவர், முருமுவின் நியமனத்தை மதமாற்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முயற்சி என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.
தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மதமாற்றம் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. அவர்களில் தினமும் 1000, 2000 பேர் யேசப்பாவை நோக்கி செல்கின்றனர். அவர்களில் 10, 20 பேர் இஸ்லாத்தைத் தழுவுகிறார்கள். தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மத்தியில் மட்டுமே மதமாற்றம் வேகமாக நடைபெறுகிறது. மதமாற்றத்தைத் தடுக்க அம்பேத்கரையும் தலித்துகளையும் தந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் அவர்களின் உண்மையான எதிரி அம்பேத்கர். பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் உண்மையான எதிரி அவர்தான், ஏனென்றால் அவர் எழுதிய அரசியல் சாசனமே அவர்களின் பிரதான எதிரி. ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்வதில்லை. பெரியாரை எதிர்ப்பது போல் அவர்களால் அம்பேத்கரை எதிர்க்க முடியாது. என பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.