ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது தாமதமாக நேருதான் காரணம்! ஓட்டுக்காக இப்படியெல்லாம் செய்தார்!
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் செய்தி தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில்,
காஷ்மீரை அப்போது ஆட்சி செய்த மகாராஜா ஹரி சிங், இந்தியாவோடு இணைப்பதற்கு தயக்கம் காட்டினார். ஆனால், பாகிஸ்தான் ஊடுருவிய போது, இந்தியாவோடு காஷ்மீரை ஹரிசிங் இணைத்தார். நேரு உடனான நட்பு மற்றும் காந்தி மீது அவர் வைத்திருந்த மரியாதை காரணமாக ஜம்மு காஷ்மீரின் முதல் முதல்வர் ஷேக் அப்துல்லா இந்த இணைப்புக்கு ஆதரவு அளித்தார் என்று பதிவிட்டு இருந்தார்.
ஜெய்ராம் ரமேஷின் இந்த ட்விட்டுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டரில் பதலடி கொடுத்துள்ளார்.
மகாராஜா ஹரிசிங் முதல் முறையாக கடந்த ஜூலை 1947-ஆம் ஆண்டு காஷ்மீர் இணைப்பு தொடர்பாக ஜவஹர்லால் நேருவை அணுகினார். ஆனால், நேரு மறுத்தார். காஷ்மீர் நிராகரிக்கப்பட்டது. நேருவின் சந்தேகத்திற்கு இடமான இந்த பங்கை மறைப்பதற்காக மகராஜா ஹரி சிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க தயக்கம் காட்டினார் என்ற வரலாற்று பொய் நீண்ட காலமாக நிலவி வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக சில தந்திர வேலைகளில் ஜவஹர்லால் நேரு ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய கிரண் ரிஜிஜூ, நேருவின் முட்டாள்தனமான செயல்களுக்காக இந்தியா இன்றும் விலை கொடுத்து வருகிறது என்றார்.