தனியா போனா குழந்தைகள் பயப்படுவாங்க.. ஒரே அறையில் இரண்டு கழிவறை கட்டியதற்கு அதிகாரி சொன்ன அடேயப்பா விளக்கம்!

Update: 2022-11-18 03:17 GMT

ஒரே அறையில் இரண்டு கழிப்பறை 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா பகுதியில் 6 லட்ச ரூபாய் மதிப்பில் பொது கழிப்பறையை சீரமைத்து கட்டியுள்ளனர். அருகிலேயே கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. ஏற்கனவே உள்ள கழிப்பறை கட்டடத்திற்கு பெயிண்ட் மட்டும் அடித்துவிட்டு, அதை ஒட்டி சிறிய அளவிலான கழிப்பறையை ஒப்பந்ததாரர் கட்டி உள்ளார். அதுவும் தனி அறைகளாக இல்லாமல் அருகருகே திறந்தவெளியில் இரண்டு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

சொன்ன விளக்கம் 

நெல்லியாளம் நகராட்சி பொறுப்பு ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் இது குறித்து விளக்கம் அளித்தார். குழந்தைகளுக்காக கழிப்பற கட்டப்பட்டுள்ளதாக கூறினார். மூடப்பட்ட அறைகளுக்குள் குழந்தைகள் சென்றால் அச்சப்படுவார்கள் என்பதற்காக இவ்வாறு திறந்தவெளியில் கட்டப்பட்டதாக தெரிவித்தார். இப்படியொரு விளக்கத்தை எங்கும் கேட்டதில்லை என சோஷியல் மீடியாவில் மீம் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். 

Input From: Puthiyathalaimurai 



Similar News