இதுவல்லவா விஞ்ஞான மோசடி? வெறும் பைப்பை மட்டும் மண்ணில் ஊன்றிவிட்டு குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்ததாக கணக்கு!

Update: 2022-11-24 03:08 GMT

திருவண்ணாமலை மாவட்டம் இந்திரவனம் கிராமத்தில் ரூ.3.69 லட்சம் மோசடி செய்து போலியான குடிநீர் குழாய் அமைத்ததின் காணொலி வைரலானது. 

பணிகள் முழுமை பெறாமலே பணி முடிக்கப்பட்டுள்ளது. பணிக்காக ரூ.3.69 லட்சம் செலவு செய்ததாகவும் கணக்கு எழுதியுள்ளார்கள். இந்த போலியான கணக்கை கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்பித்துள்ளார்கள். அவர்களும் பணி முடிந்ததாக சான்றிதழ் தந்துள்ளனர். ஆனால் பணி நடக்கவேயில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

மோசடி குறித்த வீடியோ வைரலானதால், சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளின் உத்திரவின் பேரில் வருவாய் துறையினர்கள் நேரடியாக கிராமத்திற்கு சென்று, ஆய்வு மேற்கொண்டனர். 

மோசடியில் யாரேனும் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மட்டும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News