இதில் எந்த இடத்தில் மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொல்லி இருக்கு? - வெளியான ஆதாரம், மாட்டிக்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி

Update: 2022-12-02 04:53 GMT

மத்திய அரசு அழுத்தத்தின் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சாரம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

மின் வாரியம் ரூ.1.59 லட்சம் கோடி கடனிலும், அதற்கு ஆண்டுக்கு ரூ.16,511 கோடி வட்டியும் செலுத்தும் நிலையில் உள்ளது. 

இருப்பினும், தொடர்ந்து மத்திய அரசு, மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம், மத்திய அரசின் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மின் கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கடிதஙகள் அனுப்பிவந்தன. மத்திய அரசும் அழுத்தம் கொடுத்தது. கட்டண உயர்வால் ஒரளவு சூழலை சமாளிக்கலாம்.

மின்வாரிய கடனுக்கான வட்டி 9.5 சதவீதம் முதல் 13.5 சதவீதம் வரையுள்ளது.கடன் சுமையை குறைக்க, உற்பத்தி நிறுவனங்களின் கட்டமைப்பு, விநியோகம் ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக்கூறினார். 

இந்த நிலையில் மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய கடிதத்தை பாஜக நிர்வாகி செல்வகுமார் வெளியிட்டார். எந்த இடத்தில் கட்டண உயர்வு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

Similar News