அமெரிக்க மகளிர் கிரிக்கெட் அணியில் அனைவருமே இந்திய வம்சாவளி பெண்களா? "யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா" குழப்பம்!
தென்னாபிரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அமெரிக்க வீராங்கனைகளின் பெயர் பட்டியலை அந்த நாட்டின் கிரிக்கெட் சபை அண்மையில் அறிவித்தது.
அதன்படி 15 பேர் கொண்ட அந்த அணியின் அனைத்து வீராங்கனைகளும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இது சமூக வலைத்தளங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தநிலையில் ரசிகர்கள், இது அமெரிக்க அணியா? அல்லது இந்திய 'பி' அணியா என நகைச்சுவையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த தொடரில் இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 5 அணிகளில் 4 அணிகள் தகுதிச் சுற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.