இஸ்லாமிய பெண்கள் படிக்கத் தடை: கல்விச் சான்றிதழ்களை கிழித்தெறிந்த ஆப்கன் பேராசிரியர்
ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டது.
பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை பெண்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தலிபான்கள் உத்தரவால் ஆப்கானிஸ்தான் பெண்கள் கடும் அதிருப்தியடைந்தனர். தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது என போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.
காபூல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் எனக்கு எனது கல்விச் சான்றிதழ்கள் தேவையில்லை. இந்த நாட்டில் இனி கல்விக்கு இடமில்லை. எனது தாயும் சகோதரியும் படிக்க முடியாது என்றால் எனக்கும் கல்விச் சான்றிதழ்கள் தேவையில்லை எனக்கூறி சான்றிதழ்களை கிழித்து எறிகிறார்.