துர்கா ஸ்டாலினிடம் காலில் விழுந்த அமைச்சர் சேகர்பாபு! ஓ இது தான் சமூக நீதியா?
முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு கலைவாணர் அரங்கில், 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நடத்தி வைத்தார். விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
70 ஜோடிகளுக்கும் ரூ.1 லட்சம் மதிப்பில் தலா 4 கிராம் தங்கத் தாலி, கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி, கிரைண்டர் உட்பட 36 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
துர்காவிற்கு நினைவு பரிசாக பெரிய கடிகாரத்தை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். தொடர்ந்து பட்டுச்சேலையும் பரிசளித்தார்.
அப்போது திடீரென துர்காவின் காலில் விழுந்து ஆசிப்பெற்ற சேகர்பாபுவின் செயலால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்த நெட்டிசன்கள் சுயமாக சிந்தித்து, எதை செய்தால் என்ன பயன் கிடைக்கும் என்று செயல்படுவது தான் திராவிட சுயமரியாதை என் விமர்சித்துள்ளனர்.
இதனை திமுக சார்பு ஊடகங்கள் நினைவுப் பரிசை வழங்கிய பின்னர் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினின் கால்களில் விழுந்து அமைச்சர் சேகர்பாபு ஆசி பெற்றார் என்பது போல திரித்து வெளியிட்டுள்ளன.