பெண்கள் காமவெறியர்களை கேட்பதில்லை: வைரமுத்துவை வைத்து செய்யும் பாடகி சின்மயி!

Update: 2023-03-09 07:58 GMT

திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதித்தல் கேட்கிறாள் வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள் ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள் கொடுத்துப் பாருங்கள்; அவளே பாதுகாப்பாள் ஆண்களையும் உலக மகளிர் திருநாள் வாழ்த்து என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு, பதிலடி கொடுத்த பாடகி சின்மயி, அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது காம வெறியர்களை கேட்கவில்லை பெண்; பாதுகாப்பு கேட்கிறாள். பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூரு கேட்கவில்லை பெண்; நியாயம் கேட்கிறாள். என கூறி உள்ளார். 

ஏற்கனவே பிரபல சினிமா பாடலாசிரியரும் எழுத்தாளருமான வைரமுத்து தன்னிடம் 2005-2006 ம் ஆண்டில் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக பின்னணிப்பாடகி சின்மயி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார். #metoo என்ற ஹேஸ்டோக்குடன் போடப்பட்ட அவரது பதிவு ட்ரெண்டானது. இது தமிழ் திரையுலகில் பேசு பொருளாக மாறி இருந்தது.

இந்நிலையில் தான் சின்மயி வைர முத்துவின் மகளிர் தின பதிவிற்கு பதிலடி தெரிவித்துள்ளார்.





Similar News