"வாயை மூடு"... குறை சொன்ன பெண்ணை அவமானப்படுத்திய அமைச்சர் பொன்முடி! இறந்த கணவனையும் விட்டுவைக்கவில்லை!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நடந்த விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கவனித்து செய்ய கூறினார். மாவட்ட ஆட்சியர் கூறியதுபோல் இங்கு அரசு கலை கல்லூரி வந்துள்ளது. இதுதவிர பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் தான் ஆகிறது. கிராமங்கள், நகரங்களிலும் வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. எனது நண்பரான உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு மூலம் நகரங்கள், கிராமங்களில் எல்லா வகையான பணிகளையும் செய்ய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையாக இருந்தாலும் சரி, திருக்கோவிலூராக இருந்தாலும் சரி, விழுப்புரமாக இருந்தாலும் சரி எல்லோரும் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் பணிகள் நடந்து வருகிறது'' என பேசினார்.
இந்த வேளையில் கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் குறைகள் உள்ளதாக தெரிவித்தார். இதை எதிர்பாராத அமைச்சர் பொன்முடி, ‛‛குறைகள் இருக்கிறதா?'' என வினவினார். அதன்பிறகு சில வினாடிகள் யோசித்த பொன்முடி சிரித்தபடியே, ‛‛வாயை மூடிட்டு இரு' எனக்கூறி சிக்னல் காட்டினார்.
ஏற்கனவே ஓசி பஸ், எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சீங்களா என்றெல்லாம் பேசி சர்ச்சையில் சிக்கிய பொன்முடி, பொதுவெளியில் பெண்ணை அவமானப்படுத்தியது மட்டும் அல்லது அவரது கணவர் பற்றியும் பேசி முகம் சுளிக்க வைத்துள்ளார்.
Input From: Dinamalar