எதிராளிக்கு தக்க பதிலடி கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.. மத்திய அமைச்சர் காரசார பதில்..

தற்சார்புள்ள இந்தியா தனது எதிராளிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் திறனுடன் அமைதிக்கு முன்னணியில் உள்ளது பாதுகாப்பு அமைச்சர் பேச்சு.

Update: 2023-06-21 09:55 GMT

2047-க்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான அடித்தளத்துடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் அதிகாரமளித்தலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 2023, ஜனவரி 19 அன்று உத்தராகண்டின் டேராடூனில், 'பொன்னான எதிர்காலம்’ என்ற மையப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், சமூக ஒருங்கிணைப்பையும், நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்துடன் மக்களின் மறு இணைப்பையும் உறுதி செய்துள்ளன என்றார்.


பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்த ராஜ்நாத் சிங், ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டினார். ராணுவப் பள்ளிகளில் பெண்களுக்கான சேர்க்கை தொடங்கியிருப்பதையும், பெண் அதிகாரிகள் உலகில் மிக உயரமான சியாச்சின் பனி மலையில் உள்ள போர்களத்தில் அவர்கள் பணியமர்த்தப்படுவதையும் எடுத்துரைத்தார். பெண்களுக்கு முழுமையானப் பாதுகாப்பை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதோடு ஏராளமான வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.


ராணுவம் மற்றும் பாதுகாப்பு கண்ணோட்டத்திலிருந்து இந்தியாவின் பொன்னான எதிர்காலத்தின் திட்டம் பற்றி குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், பாதுகாப்பு துறையில் முழுமையான தற்சார்பு உள்ளதாகவும் நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டிருப்பதாகவும் இந்தியாவைக் கட்டமைக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News