உலக பொருளாதாரத்தில் முக்கிய இடத்தில் இந்தியா.. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் முன்மாதிரி..
தென்னாப்பிரிக்கா நடத்திய பிரிக்ஸ் கலாச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்தியக் கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட இந்தியக்குழு தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றது. கொரோனா நோய் தொற்று பாதிப்புக்குப் பிந்தைய சமூக-பொருளாதார மீட்பு மற்றும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக பிரிக்ஸ் கலாச்சார கூட்டுச் செயல்பாடுகளை வலுப்படுத்துதல்' என்பது இந்த கூட்டத்தின் கருப்பொருளாக இருந்தது.
மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி தமது உரையில், "பிரிக்ஸ் நாடுகள் இப்போது உலக பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார். இந்த நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலக அளவில் கால் பங்கிற்கும் மேல் பங்களிப்பை வழங்குவதாக" அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் தற்போதைய ஜி 20 தலைத்துவத்தில், கலாச்சார சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தல், நிலையான எதிர்காலத்திற்காக பாரம்பரியத்தைப் பயன்படுத்துதல், கலாச்சார பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் கூறினார். பிரிக்ஸ் அமைப்புக்குள் ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்றும் அமைச்சர் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
டிஜிட்டல் வழிமுறைகள் பரவலான வசதிகளை வழங்கியுள்ளன என்பதை அமைச்சர் விளக்கினார். இன்று, உலகளாவிய டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது என்று அமைச்சர் சுட்டிட்டுக் காட்டினார். டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை மூலம் மக்களை நெருக்கமாக கொண்டு வர முடியும் என்று அவர் தெரிவித்தார். இது, நாகரிகங்களுக்கிடையில் பரஸ்பர புரிதலை எளிதாக்க உதவும் என்று அவர் கூறினார்.
Input & Image courtesy: News