உலகளாவிய சவால்களுக்கு தீர்வு தரும் இந்தியா... பிரதமர் மோடி தலைமையின் கீழ் அபார வளர்ச்சி...
பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு நம்பகமான பங்குதார நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பிரதமர் அங்கீகரித்துள்ளார் என்று மத்திய அமைச்சர் தன்னுடைய ஒரு கட்டுரையில் இன்று குறிப்பிட்டு இருந்தார். குறிப்பாக இந்தியா தொழில்நுட்பத் துறையில் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் அதிக அளவில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது உலக நாடுகள் அனைத்தும் வியந்து பார்க்கும் அளவிற்கு நம்முடைய தொழில்நுட்பம் என்று வளர்ச்சி அடைகிறது என்றால் அதற்கு மோடி அவர்களின் அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எழுதிய கட்டுரையின் மூலம், பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு நம்பகமான பங்குதார நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பிரதமர் நரேந்திர மோடி அங்கீகரித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகமும் இந்த ஒரு கட்டுரையை தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு முதல் தடுப்பூசிகள், மின்னணுவியல் மற்றும் செமிகண்டக்டர்கள் வரை பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு இந்தியா இப்போது நம்பகமான பங்குதார நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எழுதியுள்ளார்’.
Input & Image courtesy: News