கேரளா இல்லையாம் இனி கேரளம்'மாம்.. மாநில பெயர் மாற்றத்திற்கான தீர்மானம்..
கேரள சட்டசபையில் தற்பொழுது முக்கியமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்ட இருப்பது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அந்த மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் தான் தற்போது நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. கேரளாவில் இடதுசாரி கட்சி கூட்டணி ஆட்சியின் கீழ் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் கேரள சட்டசபையில் நேற்று முன்தினம் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
அது மட்டும் கிடையாது அடுத்த நிலையில் கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பல ஆண்டுகளாகவே கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் கேரளாவை கேரளம் என பெயரிட்டு மாற்ற மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் சட்டம் 118 படியாக தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்தார்.
மேலும் சட்டசபையில் பெயர் மாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள கேரள சட்டசபை சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டு இருக்கிறது. மாநில பெயர் மாற்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற பின் மாநில பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் உடனடியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News