ஆங்கிலேயர் காலத்து சட்டமா இனி கிடையாது.. இந்தியாவில் அறிமுகமாகும் புதிய மறு சீரமைப்பு..
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1860 ஆம் ஆண்டு ipc என்னும் இந்திய தண்டனைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது ஒரு தவறை செய்தால் அதற்கு என்ன தண்டனை என்று IPC நமக்கு தெளிவாக தண்டனைகளை வழங்கியது. ஆனால் 1898 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டமும், 1872 ஆம் ஆண்டு இந்திய சாட்சியங்கள் சட்டமும் கொண்டுவரப்பட்டன. பெரும்பாலான குற்றங்களுக்கு இந்தச் சட்டங்களில் தான் வழக்குகள் பதிவு செய்யப் படுகின்றன. இந்நிலையில் மேற்கண்ட மூன்று சட்டங்களும் தற்போது மறு சீரமைக்கப்பட்ட உள்ளது. இந்த மறு சீரமைப்பு புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை கொண்டு வருவதற்கான மசோதாக்களை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. இந்திய தடைச் சட்டத்திற்கு பதிலாக பாரதிய நியாய சன்ஷிதா மசோதா, 2023 கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக முறையே பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சக்ஷ்ய மசோதா, 2023 ஆகியவற்றை நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய அரசின் சார்பில் இந்த ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.
மேலும் இந்த மூன்றும் மசோதாக்களின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் மசோதா களின் நோக்கம் நீதி அளிப்பதுதான், தண்டனை அளிப்பது அல்ல. குற்றங்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே தண்டனை அளிக்கப்படும். விரைவாக நீதி வழங்கவும் தற்கால தேவைகள் மற்றும் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் அசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் அமித்ஷா தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News